தாவாவ், செப்டம்பர்-5 – 16 வயது பையனை ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியக் குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவருக்கு, சபா தாவாவ் செஷன்ஸ் நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி நண்பகல் வாக்கில் தனக்குச் சொந்தமான முடி திருத்தும் கடையில் அக்குற்றத்தைப் புரிந்ததாக, 48 வயது அவ்வாடவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
ஆனால், பாதிக்கப்பட்ட பையனுக்கு 13 வயதிருக்கும் போதே, அவனை அந்நபர் இயற்கைக்கு மாறான உறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .
ஒரே கிராமத்தில் வசிப்பதால், வாரம் ஒருமுறையாவது அப்பையனை அந்நபர் ஓரினப் புணர்ச்சிக்கு ஈடுபடுத்தி வந்துள்ளார்.
அதோடு, ஓரினப் புணர்ச்சியால் அப்பையன் HIV கிருமிப் பாதிப்புக்கு ஆளானதும் மருத்துவ பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.
இத்தனை இளம் வயதில் ஒரு பையனுக்கு இந்த கொடிய நோய் வந்திருக்கக் கூடாது; எனவே குற்றவாளிக்கு சிறையுடன் 4 பிரம்படிகளும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
சிறைவாசத்தின் போது, மறுவாழ்வு ஆலோசனைப் பெறவும், தண்டனை முடிந்து வெளியேறிய பிறகு ஈராண்டுகளுக்கு போலீஸ் கண்காணில் இருக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.