உலு சிலாங்கூர், அக்டோபர்-17, சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள TNB துணை மின்நிலையத்தை முக்கியக் குறியாக வைத்து கொள்ளையிட்டு வந்த டர்ஷன் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
அக்கும்பலைச் சேர்ந்த 20 முதல் 50 வயது வரையிலான 4 ஆடவர்கள் பஹாங், பெந்தோங்கில் கடந்த திங்கட்கிழமை கைதாகினர்.
அவர்களிடமிருந்து பல்வேறு பொருட்களும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Hino லாரி, Ford Ranger 4 சக்கர வாகனம், கைப்பேசிகள், கை விலங்குகள், TNB சின்னம் பொறிக்கப்பட்ட கேபிள் உறைகள், வீடுடைத்து திருட பயன்படுத்தும் கருவிகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
அக்கும்பலின் தலைவனுக்கு ஏற்கனவே குற்றப்பதிவு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
அக்டோபர் 21 வரை ஏழு நாட்களுக்கு அந்நால்வரும் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.