
பத்தாங் காலி, பிப் 21 – பத்தாங் காலியில் இன்று விடியற்காலையில் மஸ்ஜிட் ஜாமேக் சுங்கை மாசின் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த மாணவி கட்டாயப்படுத்தி தூக்கியதோடு அவரை மானபங்க செய்ய முயற்சித்த ஆடவனை போலீசார் கைது செய்ததோடு அவனை விசாரணை செய்து வருகின்றனர்.
பெண்களின் தொழுகை வரிசையின் பின்புறத்தில், அந்த மாணவி சாஷ்டாங்க நிலையில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்தது.
சிசிடிவி காட்சிகளின்படி, தலையில் வெள்ளை தொப்பியை அணிந்த ஆடவன் ஒருவன் பெண்களின் பிரார்த்தனை பகுதிக்குள் புகுந்து பாதிக்கப்பட்ட மாணவியை கட்டாயப்படுத்தி தூக்கியதோடு அவரை மானபங்க செய்ய முயற்சித்துள்ளான். ஆனால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி எதிர்த்ததால் அந்த ஆடவன் தப்பி ஓடினான்.
அப்போது, பின்வரிசையில் தனியாக தொழுது கொண்டிருந்ததால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மற்ற பெண்களும் இந்த செயலை அறியவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent அகமட் பைசால் தாரிம் ( Ahmad Faizal Tahrim தெரிவித்தார்