
ஷா அலாம், நவ 17 – பத்தாங் காலி – கெந்திங் மலை சாலை அடுத்த ஆண்டு மே மாதம் பொதுமக்களுக்காக திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த சாலை நிர்மாணிப்பு பணிகள் முடிவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. மலைச் சாரல் பகுதியில் பழுதுபார்க்கும் மற்றும் நிலைத்தன்மை வேலைகள் இதுவரை 38.6 விழுக்காடு முழுமையடைந்திருப்பதாக சிலங்கூர் அடிப்படை வசதி மற்றும் விவசாய குழுவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் தெரிவித்திருக்கிறார். மே 28ஆம் தேதி மலை சாரல் பகுதியில் பழுதுபார்க்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அப்பணிகள் முழுமையடையும் என அவர் கூறினார். அனைத்து பணிகளும் முழுமையடைந்த பின் கெந்திங் மலைக்கான சாலைகளை திறப்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம் என அவர் கூறினார்.