
பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்த கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு, தமது சட்டமன்ற உறுப்பினர் தகுதியை பாதிக்கவில்லை என பேராக் மாநில சுகாதார, மனிதவள, உயர்நெறி, இந்திய விவகாரங்களுக்கான ஆச்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் தெரிவித்தார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் அம்முடிவு, மக்கள் பிரதிநிதி தகுதியை இலக்கச் செய்யும், அரசியலமைப்புச் சட்டத்தின் 48-வது பிரிவு உட்பிரிவு ஒன்று உட்பிரிவு e-யை உட்படுத்தி இருக்கவில்லை என்பதையும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக் காட்டினார்.
அதோடு அந்த தீர்ப்பு சிவிஸ் வழக்கை உட்படுத்தியது ஆகும். கிரிமினஸ் வழக்கை உட்படுத்தி இருந்தால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழக்க நேரிடும் என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.
கிரிமினஸ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, ஈராண்டு சிறைத் தண்டனை அல்லது ஈராயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது தகுதியை இழக்க நேரிடும் என, அரசியலமைப்புச் சட்டத்தின் 48-வது பிரிவு உட்பிரிவு ஒன்று உட்பிரிவு e-யின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.