Latestமலேசியா

பத்திரிகைச் சுதந்திரத்தில் மலேசியா பெரும் சரிவு ; முந்தைய அரசாங்கத்தை விட மோசம் இல்லை என்கிறார் அமைச்சர் ஃபாஹ்மி

புத்ராஜெயா, மே-5, பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டுப் பட்டியலில் மலேசியாவின் தற்போதைய நிலை, முந்தைய அரசாங்கத்தை விட எவ்வளவோ பரவாயில்லை என்கிறார் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில்.

பத்திரிகைச் சுதந்திரத்தில் 107-வது இடத்திற்குச் சரிந்திருப்பது ஏமாற்றம் தான் என்றாலும், பலர் அலறுவது போல் அதுவொன்றும் படு பாதாள வீழ்ச்சி அல்ல என அவர் கூறிக் கொண்டார்.

“இதே 2021-ஆம் ஆண்டில் நாம் 119-வது இடத்தில் இருந்தோம்; 2022-ல் 13-வது இடத்தைப் பிடித்திருந்தோம். அவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த 107-வது இடம் மோசமானதல்ல” என ஃபாஹ்மி சொன்னார்.

எனினும், பத்திரிகைச் சுதந்திரம் மேம்பட வேண்டும் என்பதில் தமக்கு மாற்றுக் கருத்து இல்லை; அதற்குரிய நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்றார் அவர்.

அதன் ஒரு பகுதியாக, நாட்டில் பொய்ச் செய்தி பரவலை முறியடிக்க தாமும் எல்லையில்லாத செய்தியாளர்களும் பல சுற்றுச் சந்திப்புகளுக்கும் கலந்தாய்வுகளுக்கும் இணங்கியிருப்பதாக அமைச்சர் கூறினார்.

வெள்ளிக்கிழமை வெளியான 2024-ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகைச் சுதந்திர குறியீட்டுப் பட்டியலில், வெறும் 52.07 புள்ளிகளுடன் மலேசியா 73-வது இடத்தில் இருந்து 107-வது இடத்திற்குச் சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்தாண்டை விட இது 34 இடங்கள் சரிவாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!