Latestமலேசியா

பத்துமலையில் பக்தர்கள் விதிமீறல்;  தேவஸ்தானத்திற்கு குற்றப் பதிவு

கோலாலம்பூர், ஜன 11 – ஞாயிற்றுக்கிழமையன்று பத்துமலையில் கூடிய பக்தர்கள் SOP விதிமுறைகளை மீறியதால் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு குற்றப்பதிவுக்கான ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

நேர்த்திக் கடனை நிறைவேற்றிய பக்தர்களில் சிலர் SOP விதிமுறைகளை மீறியுள்ளனர். உறுமிமேளம் வாசித்துள்ளனர். பலர் முகக் கவசம்கூட அணியவில்லை. இந்த சம்பவம் குறித்த சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட கோம்பாக் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தேவஸ்தானத்திற்கு ஆயிரம் ரிங்கிட் அபராதத்திற்கான குற்றப் பதிவை வழங்கியதை கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Zainal Mohmed Mohamad உறுதிப்படுத்தினார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதை ஆலய நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 தொற்று பரவலை தடுக்கத் தவறும் எந்தவொரு அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!