
கோலாலம்பூர் , ஜன 12 – இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பத்துமலை முருகன் திருத்தலத்தில் பெரிய அளவில் பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த விழாவின் முத்தாய்ப்பாக பொது மக்கள் ஒன்று கூடி வைக்கப்படும் ஒற்றுமை பொங்கல் திகழவிருக்கின்றது.
பொங்கலிடும் அந்த நிகழ்ச்சியுடன், மலேசிய நாட்டியாஞ்சலி கழகத்தின், 10 நிமிடங்களில் 100 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைக்கும் முயற்சியும் காலை மணி 11. 30 -க்கு நடைபெறும்.
இதனிடையே, இதர நிகழ்ச்சிகள் மாலை மணி 4.30 முதல் தொடங்கும் வேளையில், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு , கொண்டாட்டத்தை விமரிசையாக்கும்படி, ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், கிராமிய நடன நிகழ்ச்சி ஆகியவற்றுடன் உறி அடித்தல், கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Super Singer சாய்சரண், கலா ,அந்தோணி, ஆகியோரின் இசை நிகழ்ச்சியும், இக்கொண்டாட்டத்தை களை கட்டவிருக்கிறது.