
கோலாலம்பூர், ஜன 4 – இம்மாதம் ஜனவரி 15 -ஆம் தேதி , ஞாயிற்றுக்கிழமை வரவேற்கப்படும் பொங்கலை முன்னிட்டு , பத்துமலை கோயிலில் , ‘ஒற்றுமை பொங்கலுக்கு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இவ்வாண்டு பொங்கலை மிகச் சிறப்பாக, அனைவருடனும் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தில் , அனைத்து வயது பெண்களும் பொங்கல் வைக்க அழைக்கப்படுவதாக, கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா கேட்டுக் கொண்டார்.
பொங்கல் பானை, பால் உட்பட பொங்கல் வைப்பதற்கான அனைத்து பொருட்களையும் , வசதிகளையும் ஆலயத் தரப்பே ஏற்பாடு செய்யும் . அதையடுத்து, ஏற்பாடுகள் முழுமையாக செய்வதற்காக, பொங்கல் வைக்க எண்ணியிருப்பவர்கள் ஆலய தரப்புடன் முன்பதிவு செய்துக் கொள்ளுமாறும் நடராஜா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இந்த ஒற்றுமை பொங்கல் நிகழ்ச்சியோடு, சமயம், கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுடன், இசை நிகழ்ச்சியும் நடைபெறுமென அவர் குறிப்பிட்டார்.