Latestமலேசியா

பத்துமலை திருத்தலத்தில் தேசிய பொங்கல் விழா: பரிசுகளுடன் விளையாட்டுப் போட்டிகள்!

கோலாலம்பூர், ஜனவரி 8 – தைப்பொங்கலை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்தில் வரும் ஜனவரி 19 அன்று தேசிய பொங்கல் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் மலேசிய இந்து ஆலய – இந்து அமைப்புகளின் பேரவை எனும் மஹிமா இணைந்து இந்த விழாவை ஏற்பாடுச் செய்துள்ளன.

இவ்விழாவின் முக்கிய சிறப்பு அங்கமாக, பல்வேறு போட்டிகள் பரிசுகளுடன் இடம்பெறவுள்ளன.

அவ்வகையில், உறியடித்தல், மார்டன் ஜல்லிக்கட்டு, மெது சைக்கிள் ஓட்டம், பூச்சரம் பின்னுதல் போன்ற போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இதன் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 300 ரிங்கிட், இரண்டாம் பரிசாக 200 ரிங்கிட், மூன்றாம் பரிசாக 100 ரிங்கிட் வழங்கப்படும்.

இதுபோலவே, தோரணம் பின்னுதல் போட்டிக்கு முதல் பரிசு 200 ரிங்கிட், இரண்டாம் பரிசு 150 ரிங்கிட் மற்றும் மூன்றாம் பரிசு 50 ரிங்கிட் வீதமாக இருக்கின்றன.

வண்ணம் தீட்டுதல் போட்டியில் முதல் பரிசாக 150 ரிங்கிட், இரண்டாம் பரிசு 100 ரிங்கிட், மூன்றாம் பரிசு 50 ரிங்கிட்டாகும்.

இதனிடையே, குழு போட்டியான வழுக்கு மரம் ஏறுதல் வெற்றி குழுவுக்கு 1001 ரிங்கிட் பரிசும் காத்திருக்கிறது.

இதேபோல், கயிறு இழுத்தல் போட்டியில் முதல் பரிசு வெல்லும் குழுவுக்கு 500 ரிங்கிட் மற்றும் இரண்டாம் நிலை குழுவுக்கு 300 ரிங்கிட் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், தேசிய பொங்கல் விழா அன்று பதிவு செய்து கொள்ளலாம்.

அனைவரும் திரளாக கலந்து கொண்டு, தைப்பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு தேவஸ்தானத்தின் அரங்காவலரும் மஹிமாவின் தலைவருமான டத்தோ சிவக்குமார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!