
கோலாலம்பூர், பிப் 5 – இன்று வார இறுதிநாளாள ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை பொது விடுமுறையை முன்னிட்டு அளவுக்கு அதிகமான பத்தர்கள் கூட்டம் பத்துமலையில் திரண்டிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் படையின் இடைக்கால தலைவரான துணை கமிஷனர் டத்தோ எஸ்.சசிகலா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை தொடங்கி பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக பத்துமலை திருத்தலத்திற்கு அலைஅலையாக வருகை புரிவதால் போலீஸ் படை சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக அவர் கூறினார். பத்துமலை தைப்பூச ஏற்பாடுகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு அங்கு 1,888 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக DCP சசிகாலா தெரிவித்தார்.