
கோலாலம்பூர், பிப் 2 – நாளை இரவு மணி 10-க்கு பத்துமலை முருகன் திருத்தலத்தை நோக்கி 10 மணி நேர ‘பஜன் ஊர்வலத்தை’ மேற்கொள்ளவிருக்கின்றனர் Pratyangira Bhajans Samaj குழுவினர்.
நாட்டிலுள்ள இதர பஜன் குழுக்களையும் ஒரு பெரிய குடும்பமாக இணைத்து, அக்குழுவினர் செந்தூல், ஜாலான் ஈப்போ, முருகன் ஆலயத்திலிருந்து, பத்துமலை முருகன் திருத்தலம் வரையில், பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுடன் இணைந்து ஊர்வலமாக செல்லவிருக்கின்றனர்.
அந்த பஜன் ஊர்வலத்தில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம். தன்னார்வலர்களாக அந்த ஊர்வலத்தில் பங்கு பெற விரும்புபவர்கள் , மஞ்சள் நிறத்திலான பாரம்பரிய உடையை அணிந்து வர வேண்டும். மேல் விபரங்களுக்கு யஷ்வீன் ராஜ் ( Yashven Raj ) என்பவரை 010 -3673367 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.