கோலாலம்பூர், பிப் 17 – 15-வது பொதுத் தேர்தலில், நாடாளுமன்றத் தொகுதிகளில் சுயேட்சையாக வேட்பாளர்கள் போட்டியிடுவதை ஊக்குவிக்கும் GERAK Independent அமைப்பு, அதன் முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Maju எனப்படும் நீதிக்காவும் ஒற்றுமைக்காகவும் போராடும் Malaysian Action for Justice and Unity Foundation அமைப்பின் தலைமையில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளை ஒன்றிணைத்துள்ளது இந்த GERAK அமைப்பு.
இந்த அமைப்பு முதல் கட்டமாக அறிவித்துள்ள 6 வேட்பாளர்களில் மனித உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞரான Siti Kasim -மும் அடங்குவார். அவர் பத்து தொகுதியில் போட்டியிடவுள்ளார்.