பத்து பஹாட், நவம்பர்-11 -வாக்குவாதம் முற்றி காதலியின் கன்னத்தில் அறைந்ததற்காக 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட ஆடவன், அதனைச் செலுத்தத் தவறியதால் 1 மாதம் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஜோகூர், பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி இன்று அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நவம்பர் 7-ஆம் தேதி தாமான் மாஜுவில் உள்ள கார் கழுவும் கடையில் 33 வயது காதலியை வேண்டுமென்றே கன்னத்தில் அறைந்து காயமேற்படுத்தியதை, 43 வயது Rosmaini Saiman நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.
அக்குற்றத்திற்கு அதிகபட்சம் ஓராண்டு சிறையும் இரண்டாயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
இந்நிலையில், 1,500 ரிங்கிட் அபராதம் அல்லது 1 மாத சிறைத் தண்டனை என நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
ஆனால் அபராதத்தைச் செலுத்தத் தவறியதால் அவ்ஆடவன் சிறையில் அடைக்கப்பட்டான்.