பத்து பஹாட், ஆகஸ்ட்-22 – ஜோகூர், பத்து பஹாட்டில், தோழியைக் கற்பழித்ததாக மூன்றாம் படிவ மாணவன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
ஜூன் மாத இறுதி வாக்கில் ரெங்கிட்டில் (Rengit) உள்ள வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்ததாக அவன் குற்றம் சாட்டப்பட்டான்.
20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் 376-வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும் 15 வயது அப்பையனிடம் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
1,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தில் அவனை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
அக்டோபர் 9-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.