பத்து பஹாட், செப்டம்பர் 3 – கடந்த மாதம், செங்கராங்கில் (Senggarang), பாரிட் லாபிஸ் சுங்கை லூருசில் (Parit Lapis Sungai Lurus), பலகாரங்களை எடுக்கும் உணவுப் பிடிப்பான் பயன்படுத்தி தனது உறவுகார மகனை காயப்படுத்திய குற்றத்தை தோட்ட தொழிலாளி ஒருவர் ஒப்புகொண்டார்.
பாதிக்கப்பட்டவர் கோழியை வறுத்துக்கொண்டிருந்த போது, இருவருக்கும் வாய் சண்டை மூண்டுள்ளது.
பாட்டியின் வாரிசுரிமையில் ஏற்பட்ட நீண்டகால அதிருப்தி இந்த தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குற்றத்தை ஒப்புகொண்ட சுஹைமி சுலைமான் (Suhaimi Sulaiman) எனும் 50 வயது அந்த நபருக்கு, இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.