Latestமலேசியா

பந்தயக் கார் கவிழ்ந்து மோதியதில் ரசிகர் பலி

கோலாலம்பூர், ஜன 1 – பேரா, கம்போங் காஜா Dato Sagor கார் பந்தயத் தளத்தில் கார் கவிழ்ந்து ரசிகரை மோதியதால் அவர் இறந்தார். இரண்டு பந்தயக் கார்கள் முந்திச் செல்வதற்கு வேகமாக சென்று கொண்டிருந்போது ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது . அதனைத் தொடர்ந்து பந்தய தளத்திற்கு அருகே இருந்த பல ரசிகர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கிருந்து தப்பியோடியபோதிலும் அக்கார் ரசிகர் ஒருவரை மோதியது. CCT Battle of Champion போட்டியின்போது இன்று மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பேரா போலீஸ் தலைவர் Mohd yusri தெரிவித்தார். அந்த கார் பந்தயத்தில் 60 கார்கள் கலந்துகொண்டன.

1,800 சி.சி இயந்திர பிரிவில் 5 சுற்றுக்களைக் கொண்ட கார் பந்தயத்தில் 12 புரோட்டோன் சத்திரியா கார்கள் கலந்து கொண்டபோது இரண்டு கார்கள் விபத்தில் சிக்கிக் கொண்டதாக Mohd Yusri கூறினார். பந்தயம் முடியும் வேளையில் வெற்றிக் கோட்டை அடைவதற்காக இரண்டு கார்கள் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்போது அவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. பந்தய அரங்கிற்கு அருகே கவிழ்ந்த அந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!