Latestமலேசியா

பந்தாய் ரெமிஸ், ஹண்ட்லி தோட்ட ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் 56-வது திருவிழா பக்தி பரவசத்துடன் நடந்தேறியது

பேராக், ஆகஸ்ட் 19 – பேராக், பந்தாய் ரெமிஸ், ஹண்ட்லி தோட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் 56-வது திருவிழா மிக விமரிசையாக பக்தி பரவசத்துடன் நடந்தேறியது. இவ்வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிவரும் இவ்வாலயத்தின் தீமிதி திருவிழா கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் காணிக்கை செலுத்தலோடு நடைப்பெற்றது.

நாட்டுன் பிரபல தொழிலதிபர் அமரர் வி.கே கல்யாணசுந்தரத்திற்குச் சொந்தமான இந்த ஹண்ட்லி தோட்டத்தில் இவ்வாலயம் 1906 ஆம் ஆண்டு புற்று ஒன்று இருந்த இடத்தில் தோற்றம் கண்டதாகவும் பின்னர் 1956-ஆம் ஆண்டு தற்போதைய இடத்தில் புதிய கோயில்
எழுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் இன்று நகர்ப்புறங்களில் குடியேறி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்திருந்தாலும் பிறந்த மண்ணை மறவாமல் இங்கு நடைப்பெறும் ஆண்டு திருவிழாவில் கலந்து உறவுகளையும் நட்புகளையும் கண்டு அளவளாவி மகிழ்வது வழக்கமாக உள்ளது. அவ்வகையில் இவ்வருட திருவிழாவும் வந்திருந்தவர்களின் உற்சாகத்தில் மிகவும் களைக்கட்டியிருந்தது.

இன்று தோட்டப்புறங்களில் இருந்து இந்தியர்கள் பெருமளவு வெளியேறிவிட்டாலும் இது போன்ற திருவிழாக்கள் நமது சமய மற்றும் சமூக சரித்திரத்தை தொடர்ந்து கட்டிக் காக்க பெரும் பாங்காற்றுகின்றன என்பதை மறுக்க முடியாது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!