பந்திங், நவம்பர்-24,சிலாங்கூர், குவாலா லங்காட், பந்திங்கில் காரை உடைத்து திருட முயன்ற மூவர் கும்பல், கையில் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தப்பியோடியது.
சனிக்கிழமைக் காலை பந்திங்கில் தளவாடக் கடையொன்றில் பொருட்களை வாங்குவதற்காக புகார்தாரர் காரை நிறுத்தி விட்டுச் சென்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
திடீரென காரின் பாதுகாப்பு அலாரம் சத்தம் போடவே, சென்று பார்த்த அந்நபர், காரின் கதவுத் திறந்திருப்பதைக் கண்டார்.
ஆனால் காரிலிருந்த பொருளேதும் காணாமல் போகவில்லை.
இதையடுத்து, அந்த தளவாடக் கடையின் CCTV கேமராவைப் பரிசோதித்த போது, தனது காரின் கதவை உடைக்க 3 ஆடவர்கள் முயலுவதும், பின்னர் 2 புரோட்டோன் வீரா கார்களில் அவர்கள் தப்பியோடுவதையும் அவர் கண்டார்.
இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்ய, 3 சந்தேக நபர்களுக்கும் போலீஸ் வலை வீசியுள்ளது.
பந்திங் வாழ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த CCTV பதிவை சம்பந்தப்பட்ட கடையே சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியதும் தெரிய வந்தது.