Latestமலேசியா

பந்திங் உணவகத்தில் முதலை, உடும்பு, காட்டுப் பன்றி இறைச்சி பறிமுதல்; முதலாளி உட்பட மூவர் கைது

கோலாலம்பூர், நவ 11 – சிலாங்கூர் பந்திங்கிலுள்ள உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த முதலை, உடும்பு மற்றும் காட்டுப் பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதோடு உணவகத்தின் முதலாளி மற்றும் இரண்டு வங்காளதேச தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் இறைச்சி அந்த உணவகத்தில் விற்கப்படுவது சமூக வலைத்தளங்களில் மூலம் அண்மையில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்ததோடு கடந்த மூன்று ஆண்டு காலாமாக அந்த உணவகத்தில் இந்த இறைச்சிகள் விற்கப்பட்டு வந்ததாக பெர்ஹிலித்தான் எனப்படும் பூங்கா மற்றும் வனவிலங்கத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் காடிர் அபு ஹசிம் ( Abdul kadir Abu Hashim ) தெரிவித்தார்.

தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து நேற்று காலை மணி 11 மணியளவில் வளவிலங்கு குற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 75,000 ரிங்கிட் மதிப்புள்ள அந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். அந்த இறைச்சியை விற்பனை செய்வதற்கான அனுமதி எதனையும் அந்த உணவகம் பெற்றிருக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!