
வாஷிங்டன், டிச 28 – பனிப் புயல் மோசமடைந்ததன் காரணமாக நியூ யார்க் நகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. பனிப்புயல் காரணமாக நியூ யார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளில் பனி மூடிக்கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநில அரசாங்கங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு நிதியுதவி வழங்கும்படி கூட்டரசு அரசாங்கத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். பனிப்புயலில் சிக்கி அமெரிக்காவில் இதுவரை 60 பேர் மாண்டனர். அதோடு 5,500க்கும் மேற்பட்ட விமானப் பயண சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன. Colarad, Illinois, Kansas, Kentucky, Michigan , Missouri, உட்பட பல மாநிலங்களில் கடுங்குளிர் மற்றும் பனிப் புயல் சம்பவங்களால் வயதானவர்களில் பலர் மாண்டனர்.