Latestஉலகம்

பன்றி இதயம் பெற்றவருக்கு பழைய குற்றச் செயல் பதிவு உள்ளது

நியு யோர்க், ஜன 15 – உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் வாயிலாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட, அமெரிக்கா Maryland – ந்தைச் சேர்ந்த ஆடவர், 34 ஆண்டுகளுக்கு முன்பு ஆடவர் ஒருவரை பல முறை கத்தியால் குத்திய பழைய குற்றப் பதிவைக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

அந்த தகவலை அடுத்து, அதிநவீன மருத்துவ சிகிச்சையைப் பெற நோயாளிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என விவாதம் தலை தூக்கியிருக்கின்றது.

இதனிடையே, அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடமான Maryland பல்கலைக்கழக மருத்துவ மையம், ஒருவரின் பின்னணியைப் பாராது நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சையளிக்கும் கடப்பாட்டினையே மருத்துவர்கள் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!