
ஜோர்ஜ்டவுன், ஜன 10 – பினாங்கு மாநிலத்தில் பரவியிருக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியாக , அம்மாநிலத்தில் இதுவரை 1,500-கும் மேற்பட்ட பன்றிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
அம்மாநிலத்தில் உள்ள பன்றி பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகள் அனைத்தும் அழிக்கப்பட்டதை அடுத்து , நேற்று வரையில் புதிதாக பன்றி காய்ச்சல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என பினாங்கு மாநில அரசாங்க செயலாளர் Datuk Mohd Sayuthi Bakar தெரிவித்தார்.
இவ்வேளையில், முன்னெச்சரிக்கையாக 2,500 பன்றிகள் வளர்க்கப்படும் அம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பண்ணையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.