Latestமலேசியா

பயணப் படகில் பிரச்சனை ; லங்காவி ஃபேரி முனையத்தில் கூட்ட நெரிசல்

லங்காவி, பிப் 3 – லங்காவி, Kuah, Feri முனையத்தில் நெரிசலான நிலையில் பயணிகளுக்கும், Feri சேவை ஊழியர்களுக்கும் இடையில் வாய்ச் சண்டை நிகழும் காணொளியும், புகைப்படங்களும் நேற்று மாலை முதல் வைரலாகியிருந்தன .
அதன் தொடர்பில் வட பகுதிக்கான மலேசிய கடல்துறை விளக்கமளித்திருக்கின்றது.

அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய feri பயணப் படகில் பிரச்சனை ஏற்பட்டதால், லங்காவி Kuala Perlis இடையிலான பயணம் 8 மணி நேரம் வரை தாமதமடைந்தது. அதனால் சம்பந்தப்பட்ட முனையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாக அத்துறை தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!