கோலாலம்பூர், ஜூலை 26- முற்றிலும் பதின்ம வயதைச் சேர்ந்த ஆறு கலைஞர்கள் பங்கேற்கும் பயணம் தொடரும் 2.0 இசை நிகழ்ச்சி ஜூலை 31-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. மாலை மணி 5 அளவில் நடைபெறும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை மலேசிய கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய சங்கத்தின் ஏற்பாடு செய்துள்ளது.
முன்பு நடைபெற்ற பயணம் தொடரும் முதல் நிகழ்சியை விட இரண்டாவது நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதோடு இந்த நிகழ்ச்சி குறித்து மேல் விவரங்களை அதன் ஏற்பாட்டாளர் தேவி லட்சுமி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.