
மும்பை, மே 11 – செவ்வாய்கிழமையன்று மாலையில் Tiruchirappalli யிலிருந்து சிங்கப்பூர் சென்றுக்கொண்டிருந்த IndiGo விமானத்தில் பயணிகள் பகுதியில் தீப்பிடித்த வாடை வந்ததைத் தொடர்ந்து அந்த விமானம் இந்தோனேசியாவின் Medan விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறங்கியது. தீப்பிடித்த வாடை வந்ததை விமான பணியாளர்கள் உணர்ந்தனர். இதனை தொடர்ந்து வழக்கமான நடைமுறை நிர்வாக விதிமுறைகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானத்தை அருகேயுள்ள மேடானின் Kualanamu விமான நிலையத்தில் விமானி தரையிறக்கினார். அங்கு அந்த விமானத்தில் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது. பயணிகள் தங்குவதற்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டதோடு அவர்களை ஏற்றிச் செல்வதற்காக மாற்று விமானம்
Kualanamuவுக்கு சென்றதாக IndiGo வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.