Latestஉலகம்

பயணிகள் பேருந்து-எண்ணெய்க் கொள்கல லாரி மோதி விபத்து – 20 பேர் உடல் கருகி மாண்டனர்

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 17 – பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் பேருந்து, எண்ணெய்க் கொள்கல லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக் கொண்டதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாண்டனர். கடும் தீப்புண் காயங்களுக்கு ஆளான மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருப்பதாகப் போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார். இறந்தவர்களில் சிலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகியிருப்பதால், மரபணு பரிசோதனை செய்த பின்னரே அவை அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் சொன்னார்.

சம்பவத்தின் போது பயணிகள் பேருந்தும், எண்ணெய் கொள்கல லாரியும் லாகூர் (Lahore)ரில் இருந்து கராச்சி (Karachi)க்குப் பயணித்துக் கொண்டிருந்தன. அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதே இவ்விபத்துக்குக் காரணம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!