பிராங்பார்ட், பிப் 15- ஜெர்மனியில் மூனிக் நகருக்கு அருகில் இரு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் மாண்டதோடு மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். ஒரே ரயில் தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததில் அவை எதிரும் புதிருமாக மோதிக்கொண்டதாக மூனிக் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு 200க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் போலீஸ்காரர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் ஒருவர் ரயில் பெட்டியின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். எனினும் பிறகு அவர் மீட்கப்பட்டார். அந்த இரண்டு ரயில்களிலும் 85 பயணிகள் இருந்தனர்.