
அட்லாந்தா, செப் 7 – விமானப் பயணி ஒருவருக்கு கடுமையான பேதி ஏற்பட்டதால், ஒட்டுமொத்த விமானமே அல்லோலப் பட்டு துர்நாற்றம் தாங்காமல் இறுதியில் விமானம் புறப்பட்ட விமான நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டது.
இச்சம்பவம், கடந்த சனிக்கிழமை அட்லாந்தாவிலிருந்து பார்சிலோனாவுக்கு சென்ற டெல்தா ஏர்லைன்ஸில் நிகழ்ந்துள்ளது.
விமானத்தின் தரை முழுவதும் மலம் பட்டிருந்ததால், திசு பேப்பட்ர்கள் வைத்து மூடப்பட்டிருந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
விமானத்தில் இருந்த பயணிகள் மிகப்பெரிய அசெளகரியத்திற்கு ஆளானதால், விமானி விமானத்தை மீண்டும் அட்லாந்தா விமான நிலையத்திற்கு திருப்ப முடிவு செய்தார்.
அவசரமாக தரையிறங்கிய விமானத்தை சுத்தம் செய்ய 5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், 8 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் மீண்டும் புறப்பட்டு பார்சிலோனா சென்றடைந்தது.
இச்சம்பவத்தை அடுத்து, பயணிகள் அவ்விமானிக்கு பாராட்ரை தெரிவித்து வருகின்றனர்.