
கோலாலம்பூர். மார்ச் 9 – அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கிவைப்பது உட்பட தமக்கும் பெர்சத்து கட்சிக்கும் மலேயி ஊழில் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி விதித்திருக்கும் கடப்பாடுகளை அகற்றுவதற்கு சீராய்வு மனுவை முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் நீதிமன்றத்தில் யாசின் தாக்கல் செய்துள்ளார். அதோடு தமக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு பயணத் தடை தடை தவறானது என்பதோடு அடிப்படையற்ற ஒன்று என முஹிடின் தமது வழக்கு மனுவில் தெரிவித்திருக்கிறார் . வழக்கறிஞர் Chetan Jethwani வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் நேற்று சீராய்வு வழக்கு மனுவை முஹிடின் தாக்கல் செய்துள்ளார்.