Latestமலேசியா

பயத்தால் e-hailing காரிலிருந்து குதித்த பெண் பயணி; அது கடத்தல் சம்பவம் அல்ல

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19, ஜோகூர் பாருவில் e-hailing ஓட்டுநர் மற்றும் பெண் பயணியை உட்படுத்தி அண்மையில் கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

அப்படி நடந்ததாக் கூறப்பட்ட சம்பவம் உண்மையில் தவறான புரிந்துணர்வால் நிகழ்ந்த ஒன்றென, வட ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் மஹிண்டர் சிங் (Balveer Singh Mahindar Singh) தெரிவித்தார்.

சம்பவத்தின் போது e-hailing ஓட்டுநர், சாலைப் பராமரிப்புப் காரணமாக பயணியிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் பாதையை மாற்றியுள்ளார்;

ஆனால், ஓட்டுநர் அவர் பாட்டுக்கு வேறு பாதையில் செல்வதால், தாம் கடத்தப்படுகிறோமோ என்றெண்ணி அப்பெண் ஓடும் காரிலிருந்து குதித்து விட்டார்.

இது தான் நடந்த குழப்பத்துக்குக் காரணமென பல்வீர் சிங் சொன்னார்.

அதிர்ந்து போன ஓட்டுநர் உடனடியாகக் காரை நிறுத்தி அப்பெண்ணுக்கு உதவப் போனதும், அங்கிருந்த பொது மக்கள் அப்பயணியை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, அதில் குற்ற அம்சங்கள் எதுவுமில்லை என போலீஸ் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், e-hailing ஓட்டுநர்கள், பயணத்தின் போது பாதைகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், காரிலிருக்கும் பயணிகளிடம் அது குறித்து தெளிவாக தெரிவித்து விடுவது நல்லது.

அதே சமயம் பொது மக்களும் இது போன்ற சூழ்நிலைகளில் வரப்போகும் ஆபத்தை அறியாமல் கண்மூடித்தனமாகச் செயல்படக் கூடாது என, பல்வீர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!