
கோலாலம்பூர், ஜன 17 – கெடா , சுங்கைப் பட்டாணி Ria Jaya தொழில்மய பகுதியில் பயன்படுத்தப்பட்ட காகித தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர். தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 56 தீயணைப்பு வீரர்களில் காயம் அடைந்த இருவரும் அடங்குவர் என கெடா தீயணைப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இன்று காலை மணி 5.18 அளவில் அந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சுங்கை பட்டாணி, பெடோங், செமிலிங், கோத்தா சாராங் செமுட் , தானா மேரா, மற்றும் அமான் ஜெயாவை சேர்ந்த தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.