கோலாலம்பூர், பிப் 4 – பாரா விளையாட்டாளர்களுக்கான பயிற்றுநர் ஆர் . ஜெகநாதனுக்கு புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாரா விளையாட்டாளர்களுக்கான புதிய பயிற்றுநர்களை பயிற்சியளிக்கும் புதிய பொறுப்பு ஜெகநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய பாரா -விளையாட்டாளர் சங்கத்தின் தலைவர் Zarrawi Ravi Abdullah தெரிவித்தார். நாட்டின் விளையாட்டுத் துறையில் ஜெகநாதனின் அனுபவத்தையும் தகுதியையும் அடிப்படையாகக் கொண்டு அவருக்கு அந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, கடந்தாண்டு இறுதியுடன் முடிவுக்கு வந்த ஜெகநாதனின் முந்தைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை . அவரது அந்த பழைய பயிற்றுநர் பொறுப்பை முன்னாள் நடுத்தர தூர பாரா ஓட்டக்காரர் Ahmad Rafee Ariffin ஏற்கவுள்ளார். அவர் ஜெகநாதனின் உதவியாளராகவும் இருந்துள்ளார்.