
ஜோகூர் பாரு, ஜன 26 – முஸ்லீம் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட SPM பயிலறங்கு சர்ச்சை தொடர்பில், கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட தலைமையாசிரியர் வெளியிட்ட கூற்றும் முரண்படுவதாக , மாணவர்களின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடமான ஜோகூர் Infant Jesus Convent பள்ளிக்கூடம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் அந்த பயிலறங்கை நடத்தியதாக கல்வியமைச்சு குறிப்பிட்டிருந்தது.
மேலும், சீனப் பெருநாள் விடுமுறையின் போது நடத்தப்பட்ட அந்த முதல் பயிலறங்கில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு , மற்றொரு பயிலறங்கு நடத்தப்படவிருந்ததாகவும், அது குறித்து பள்ளிக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கல்வியமைச்சு கூறியிருந்தது
ஆனால், அந்த முதல் , இரண்டாவது பயிலறங்கு தொடர்பில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் பேசப்படவேயில்லை என அப்பள்ளியில் பயிலும் சில மாணவர்களின் பெற்றோர் கூறியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் , பள்ளி தரப்பு நம்பிக்கை துரோகம் செய்திருப்பதாகவே தாங்கள் கருதுவதாக அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் .