
சென்னை, ஜன 25 – பிக் பாஸ் சீசன் ஆறின் வெற்றியாளர் பட்டத்துக்கு அசீம் தகுதியானவரா இல்லையா என விவாதமே எழுந்திருக்கும் நிலையில் , தாம் வென்ற 50 லட்சம் ரூபாய் பரிசு பணத்தில் 25 லட்சம் ரூபாய் பணத்தை , கோவிட்டால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த மாணவர்களின் கல்விக்கு உதவப் போவதாகக் கூறியிருக்கிறார் அசீம்.
தாம் வெற்றிப் பெற்றால் பரிசுப் பணத்தில் பாதியை மக்களுக்கு கொடுத்து உதவப் போவதாக ஆரம்பத்தில் கூறிய வாக்குறுதியை தாம் சொன்னப்படி நிறைவேற்றப் போவதாக அவர் கூறியிருக்கின்றார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது எதிர்மறையான தோற்றத்தை வெளிப்படுத்தியே விளையாடி வந்த அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையாது என பலர் குறை கூறி வரும் நிலையில், தமது வெற்றிக்கு காரணமாக இருந்த தமது ரசிகர்களுக்கு நன்றி கூறி அசீம் காணொளியை வெளியிட்டிருக்கின்றார் .
அந்த காணொளியில், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பல ஏச்சுகளுக்கும், துன்பங்களுக்கும் , சங்கடங்களுக்கும் தாம் ஆளானதாக அசீம் குறிப்பிட்டார்.
ஆனால் 14 முறை நொமினேட் ஆகியும் தன்னை காப்பாற்றிய ரசிகர்களுக்கு கைமாறாக என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை. ஆனால் மக்களுக்கு உதவும் தமது சொல்லை காப்பத்தாப் போவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்