Latestமலேசியா

பலத்த காற்றின் தாக்கத்தால் பேராக்கிலிருந்து கெடா வரை பயணித்த Paraglider

கூலிம், ஜன 11 – Paragliding எனப்படுகின்ற வான் சாகசத்தில் ஈடுபட்ட ஆடவர் ஒருவரை, திடிரென வீசிய பலத்த காற்று ஆடவர் பேராக்கிலிருந்து கெடா வரை இழுத்துச் சென்றிருக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பேராக் Pengkalanனிலிருந்து 34 வயதான அந்த இளைஞர் பயணித்த வான்குடை மிதவையைப் பலத்த காற்று தாக்கியதால், அதனை அவரால் கட்டுப்படுத்த இயலாமல் போனது.

இதனையடுத்து, காற்றடித்து கொண்டுவரப்பட்ட அந்த மிதவை கெடாவில் உள்ள Kuala Ketil மசூதியில்தான் தரையிறங்கியது. தரையில் விழுந்த அதிர்ச்சியில் அந்த ஆடவருக்குத் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் Baling மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் Shamsudin Mamat தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!