
கோத்தா கினாபாலு, டிச 31 – வானில் இருந்து வான்குடையில் குதிக்கும் Paragliding நடவடிக்கையின் போது, வேகமான காற்று வீசி கட்டுப்பாட்டை இழந்த ஆடவர், கான்கிரீட் மலைச்சரிவில் விழுந்து உயிரிழந்தார்.
சபா , கோத்தா கினாபாலு, Manggatal பகுதிக்கு அருகில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில், பலத்த காயம் காரணமாக 26 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோத்தா கினாபாலு இடைக்கால மாவட்ட போலீஸ் தலைவர் Kalsom Idris தெரிவித்தார்.
முன்னதாக அந்த ஆடவர் சம்பவத்தின் போது, பயணி ஒருவரை பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டிருக்கின்றார். எனினும், தனது வான்குடையை கழற்றுவதற்கு முன்னதாக, திடிரேன வீசிய வேகமான காற்றினால் தூக்கிச் செல்லப்பட்டு , பின்னர் மலைச்சரிவில் விழுந்து பலத்த காயங்களுக்கு இலக்கானதாக Kalsom கூறினார்.