
கோலாலம்பூர், மார்ச் 29 – அரசியல் கட்சிகள், பொது பல்கலைகழகங்களில் தங்களது கிளைகளை அமைக்க அனுமதிக்கப்படாது என உயர் கல்வி அமைச்சர் காலிட் நோர்டின் ( Khaled Nordin ) தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் அரசியல் கிளைகளை இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு செயல் அல்ல. அத்துடன் பல தரப்புகள் அதற்கு எதிராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எனினும், தங்களது வளாகத்துக்குள் அரசியல் தலைவர்களை அனுமதிப்பது தொடர்பான முடிவை எடுக்கும் முழு உரிமை பல்கலைகழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . ஆனால், தங்களின் வருகை குறித்து அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதியைப் பெற்றிருப்பது அவசியமென காலிட் நோர்டின் கூறினார் .