
கோலாலம்பூர், செப்டம்பர் 28 – இதற்கு முன், 2042-ஆம் ஆண்டு வரையில், ஆண் நண்பரை தேடக் கூடாது என தடை விதித்து தந்தை ஒருவர் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட வேளை ; அந்த வேடிக்கையான போக்கில் தற்பொழுது மற்றொரு தந்தையும் இணைந்துள்ளார்.
முஹமட் அமிருல் ஹஸ்மி எனும் அந்நபர், அண்மையில், தனது இரு பெண் பிள்ளைகளும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும், வேடிக்கையான தருணத்தை @abah_double_sumayyah எனும் டிக் டொக் கணக்கில் பகிர்ந்துள்ளது வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக,”பட்டக்கல்வியஒ முடிக்கும் வரையில் காதலரை தேடக் கூடாது” என்பது அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கமாகும்.
அந்த சுமார் இரண்டு நிமிட காணொளியில், அமிருல் தனது பிள்ளைகளுக்கு ஒப்பந்த உள்ளடக்கத்தை விளக்கும் காட்சிகளும், அது புரிந்ததை போல, அமிருலின் ஒன்று மற்றும் மூன்று வயது பிள்ளைகள் வேடிக்கையாக தலையசைத்து, கையெழுத்திடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
தனது மகள்களுடன் இனிமையான மற்றும் அழகான நினைவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேடிக்கையாக தாம் அந்த ஒப்பந்தத்தை உருவாக்கியதாக அமிருல் கூறியுள்ளார்.
ஒரு தந்தையாக, தனது மகள்களுக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருக்கப்போவதாக கூறியுள்ள அமிருல், உண்மையில் ஒப்பந்தப்படி அவர்கள் நடந்து கொண்டாலும், நடந்து கொள்ளாவிட்டாலும் தமக்கு மகிழ்ச்சியே என்றார்.
அமிருலீன் அந்த காணொளியை இதுவரை ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை; பலர் தொடர்ந்து நேர்மறையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.