
வாஷிங்டன், மார்ச் 23 – பல்துலக்கியைக் கொண்டு, சுவரில் துளையை ஏற்படுத்தி, சிறையிலிருந்து தப்பித்து இருக்கின்றனர் இரு அமெரிக்க கைதிகள்.
நீதிமன்ற அவமதிப்பு, கடன் பற்று அட்டை மோசடி ஆகிய குற்றங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டிருந்த 37, 43 வயதுடைய அவ்விருவரும், கடந்த திங்கட்கிழமை Virginia மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து காணாமல் போயினர்.
பின்னர், அவர்கள் பல்துலக்கியைக் கொண்டு சிறையின் சுவற்றில் துளையை ஏற்படுத்தி தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், வெளியில் தப்பிச் சென்ற அவர்களை மீண்டும் பிடிக்க போலீசார் அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அதிகாலை நேரத்தில் Pancake உணவகத்தில் அந்த கைதிகள் மீண்டும் பிடிபட்டனர்.