
கோலாலம்பூர், மே 5 – இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக அரசு ஊழியர்களில் 188 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் நால்வர் 1985 ஆம் ஆண்டின் சிறப்பு தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் அபாயகரமான போதை பொருள் 3 ஆவது விதியின் கீழ் கைது செய்யப்பட்டாக புக்கிட் அமான் போதைப் பொருள் விசாரணை துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது . இந்த காலக்கடடத்தில் போதைப் பொருள் தொடரபான பல்வேறு குற்றங்களுக்காக 62,132 பேர் கைது செய்யப்பட்டதோடு 7,917 கிலோகிரேம கஞ்சா மற்றும் 1,387 லிட்டர் திரவ மய போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.