புதுச்சேரி , மார்ச் 7 – சுற்றுப் பயணிகள் மத்தியில் பிரபலமாக இருந்ததோடு , பல திரைப்படங்களிலும் இடம்பெற்றிருந்த புதுச்சேரியில் உள்ள பழைய துறைமுக பாலம், கடல் சீற்றத்தின் காரணமாக இடிந்து விழுந்தது.
பிரெஞ்ச் ஆட்சிக் காலத்தின் போது கட்டப்பட்ட அந்த பாலத்தில், துறைமுக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டு புதுச்சேரி கடற்கரையை மெருகேற்றும் காட்சிப் பொருளாக அந்த பாலம் இருந்து வந்தது.
அந்த பாலத்தில் ஹாலிவுட் படமான Life of Pi, மான் கராத்தே, நானும் ரவுடிதான் உட்பட என பல மொழி படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.