கீவ் , பிப் 25 – ரஷ்யா படையெடுப்பை முறியடிக்க Ukraine ராணுவ வீரர்கள் முழு வீச்சில் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Kyiv தலைநகருக்கு அருகில் கடும் சண்டை நிகழும் நிலையில், ரஷ்யா உக்ரேய்னை வடக்கு,கிழக்கு தெற்கு என பல் முனைகளில் இருந்து தாக்குதலை தொடுத்துள்ளது.
அந்த தாக்குதலில் சிலர் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரேன் கூறியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி Moldova, Romania, Poland, hungary ஆகிய நாடுகளில் அடைக்கலம் பெற்று வருகின்றனர். கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் உக்ரேனிலிருந்து வெளியேறியிருப்பதாக ஐநா கூறியுள்ளது.