
ஸ்ரீ நகர் ,மே 31 – இந்திய கட்டுப்பாட்டிலான காஷ்மீரில் காட்ரா குகைக் கோயிலுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 10 பேர் மாண்டனர். அந்த விபத்தில் மேலும் 40 பேர் கடுமையாக காயம் அடைந்தனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் மின்னல்வேகத்தி மீட்பு பணியை மேற்கொண்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஜம்மு காஷ்முரில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 805 பேர் மாண்டனர். அம்மாநிலத்தில் நிகழ்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்களில் 8,372 பேர் காயம் அடைந்தனர்.