
பெய்ஜிங் , மார்ச் 16 – சக யானை ஆபத்தில் சிக்கிக் கொண்டால் அதனை காப்பாற்றுவதற்கு கடைசி வரை போராடும் குணம் மிருகங்களிலேயே யானைக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் சீனாவில் வனப் பகுதியில் சேரும் சகதியும் நிறைந்த பகுதியில் யானை ஒன்று சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டது. உடன் வந்த மற்றொரு யானை தனது நண்பனை காப்பற்ற கடுமையாக முயன்றும் முடியாமல் கலங்கிப்போனது. எனினும் சம்வம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த வனத்துறையினர் சகதியில் சிக்கிய யானையை காப்பாற்றினர்.