
மீரி, செப் 1 – மலேசியாவின் உண்மையான பல்லின சமயங்கள் இருப்பதை வெளிப்படுத்தும் மபெரும் நடவடிக்கையாக பள்ளிகளில் அனைத்து சமய பாடங்களும் சிறப்பு வகுப்பாக நடத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசிய அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சமயங்கள் தொடர்பான பாடங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும் . இதன்வழி அனைத்து மாணவர்களும் தங்களது சமயங்களை பயில முடியும் என சரவா PKR துணைத் தலைவர் Senator Abun Sui தெரிவித்தார். இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பாடத்திட்டமான Imam Al Nawawi யின் 40 Hadith தொகுதி பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக அண்மையில் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
சரவாக்கில் இதர அனைத்து சமயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அவரகளது சமயங்கள் பள்ளிகளில் போதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என கல்வி அமைச்சை Sarawak PKR கேட்டுக்கொள்வதாக சராவா பக்காத்தான் ஹராப்பான் தகவல் பிரிவு தலைவருமான Senator Abun Sui வலியுறுத்தினார். நமது நாட்டிலுள்ள கிறிஸ்துவ, பௌத்த, இந்து மற்றும் இதர சமயங்கள் குறித்து சிறப்பு வகுப்புக்களை சம்பந்தப்பட்ட சமயங்களைச் சேர்ந்த தகுதியான ஆசிரியர்கள் பள்ளிகளில் போதிப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதன்வழி முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத அனைத்து மாணவர்களும் தங்களது சமய நம்பிக்கையை பள்ளி பாடத்திட்டத்திற்கு ஏற்ப கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.