
புத்ரஜயா, ஜன 25- அண்மையில், பள்ளிகளுக்கு முன், மின்னியல் சிகிரெட்டுகள் அல்லது வேப் பொருட்கள் விற்கப்படுவது வைரலானது தொடர்பில் சுகாதார அமைச்சு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மின்னியல் சிகிரெட்டுகள் அல்லது பொம்மைகளை ஒத்த வேப் பொருட்கள் அல்லது ‘Tiger Pod’ ஆகியவற்றின் விளம்பரம் அல்லது விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து தமதமைச்சுக்கு தகவல் கிடைத்திருப்பதாக, சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தப்பா சொன்னார்.
அதுபோன்ற பொருட்கள் மாணவர்களை எளிதாக கவர்திழுக்க கூடியவை என்பதால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அது கவலையை ஏற்படுத்தி இருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அவ்வகை பொருட்களில், நிகோடின் அடிப்படையிலான திரவம் பயன்படுத்தப்படுவதால், அவற்றை விற்பனை செய்யவும், விநியோகிக்கவும் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.