
புத்ரா ஜெயா, மே 16 – பழுதடைந்த பள்ளிகளை பழுதுபார்க்கும் அல்லது சீரமைக்கும் விவகாரத்தில் நிர்வாக சுணக்கம் எதுவும் இருக்கக்கூடாது என்பதை கல்வி மற்றும் நிதியமைச்சுகள் உதிப்படுத்த வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். நிர்வாக சுணக்கம் இருந்தால் அது பள்ளிகளின் பழுதுபார்க்கும் நடவடிக்கையை பெரிய அளவில் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். பழுதடைந்த பள்ளிகளை விரைந்து பழுதுபார்க்கும்படி நிதி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சை தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் முயற்சிகளை நிர்வாக சுணக்கம் எதுவும் தாமதப்படுத்தக்கூடாது என அன்வார் கேட்டுக்கொண்டார்.
மலேசியா துரித பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள போதிலும் சில பள்ளிகளில் கழிவரையின்றி மாணவர்கள் எப்படி கல்வி பயில்கின்றனர் என்று நிதியமைச்சருமான அன்வார் வினவினார். நாம் சிறந்த பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம். ஆனால் பள்ளியில் 8 கழிவறைகள் இருந்தால் அவற்றியில் நான்கு செயல் இழந்துள்ளது. அடிப்படை வசதியின்றி நாம் பிள்ளைகளுக்கு போதிக்க முடியுமா எனறும் அன்வார் வினவினார் . இன்று மலாக்காவில் தேசிய நிலையிலான ஆசிரியர் தின கொண்டாட்டத்தை தொடக்கிவைத்தபோது பிரதமர் இதனை தெரிவித்தார்.