
கோலாலம்பூர், மார்ச் 25 – பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்த மகனை , போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார் தாய் ஒருவர்.
அதன் தொடர்பான 2 நிமிட காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டிருக்கிறது.
அதில், தனது மகனின் பெயரை குறித்துக் கொள்ளுங்கள். பள்ளிக்கு செல்ல மறுத்தால் நீங்கள் அவனை அழைத்துச் சென்று விடுங்கள் என, போலீஸ்காரரிடம், தாய் கூறுவதைப் பார்க்க முடிகிறது .
பிறகு, அந்த தாயுடன் சேர்ந்து போலீஸ்காரர், சிறுவனை போலிஸ் நிலையத்திற்குள் வரும்படி அழைத்துள்ளார்.
போலீஸ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட அந்த காணொளியைப் பார்த்து பலர் ரசித்ததோடு, பலருக்கு சிரிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.