
பொந்தியான், மார்ச் 31 – பொந்தியானில் Jalan Parit Semerah 4. 7 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் மரண அடைந்தார். பொந்தியான் Parit Kudus தேசிய பள்ளிக்கு அருகே நேற்று நிகழ்ந்த அந்த விபத்தில் புரோட்டோன் காரில் பயணம் செய்த 35 வயதுடைய பயணி சுல்தானா அமினா மருத்துவமனையில் இன்று அதிகாலையில் மரணம் அடைந்ததாக Pontian மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohamad Shofee தெரிவித்தார். இதன்வழி அந்த விபத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. Parit Semerah-விலிருந்து Parit Kudus -சிற்கு சென்று கொண்டிருந்த Proton Saga கார் கட்டுப்பாட்டை இழந்து Proton Perdana காரில் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஏற்கனவே மூவர் மாண்டனர்.